திருமணம், விவாகரத்து என வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்தாலும் அனைத்தையும் தாண்டி, தற்போது வரை திறமையான நடிகை என தன்னை நிரூபித்து வருபவர் நடிகை அமலா பால்.

தற்போது முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை காட்டிலும், கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கிய துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் 'ஆடை' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று, இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ,அமலாபாலும் தன்னுடைய நண்பர்களுடன் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.  உடல் முழுவதும் கலர் பொடியுடன் கலர் ஃபுல்லாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ: