'மேயாத மான்' படத்தின் இயக்குனர் இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம்  'ஆடை' .  இந்த படத்தில் நடிகை அமலாபால் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே இப்படத்தின் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் அமலாபால் உடலில் எதுவும் உடைகள் இல்லாமல், டாய்லெட் பேப்பரை அணிந்திருந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. 

இது குறித்து பேசிய பட இயக்குனர், இது வழக்கமான கதை போல் இல்லாமல் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையாக இருக்கும் என கூறினார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி  புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  'ஆடை ' படத்தின் 3 டி லிரிக்கள் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. "நீ வானவில்லை வண்ணம் தேடும் வெள்ளை பூவா " என தொடங்கும் இந்த பாடலில் ட்ரைலரில் இடம்பெற்ற காட்சிகள் சில இடம்பெற்றுள்ள. மேலும் ஆடை இல்லாமல் அமலாபால் ஓடும் காட்சிகள், சண்டை போடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.  

இதன் மூலம் ஏதோ இதுவரை சொல்லப்படாத கருத்தை இயக்குனர் சொல்ல வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது. எனவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.