மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஆடை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தணிக்கை குழுவால் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தில் சவாலான, துணிச்சல் மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.

ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இதில் சில காட்சிகளில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளார். அவ்வாறு ஆடை இல்லாமல் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

இந்த டீசர் வெளியாகி 22 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக 'ஆடை' டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.