'ஆடை'க்கு அடுத்து அமலா பாலின் அடுத்த படம்... படத்தை பார்த்த சென்சார் போர்டு என்ன சொன்னாங்க தெரியுமா?

அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து நல்ல வரவேற்பு பெற்றது. மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹீரோயினை மையமாக கொண்ட இந்த படத்தில், பெரும்பாலான காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து அமலா பால் யூனிட்டையே அசரவைத்தார். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்தது. படத்தை பார்த்த பலரும் அமலா பாலை அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடு இணைந்து விமர்சிக்க ஆரம்பித்தனர். ஆனால் பெரும்பாலானோர் படத்திற்கு விருதுகள் கிடைக்கும் என டுவிட்டர் மூலம் அமலாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அமலா பால் முக்கிய வேடத்தில் நடித்த அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள படத்தில், கே.ஆர்.வினோத் என்பவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.  இந்த படத்தை லிப்ரா புரோடக்ஷன்ஸ் வெளியிட உள்ளது.
 சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு படம் திரையிடப்பட்டுள்ளது.படத்தை பார்த்து அசத்து போன அதிகாரிகள், சத்தமே இல்லாம யு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. 

 

இதனால் திக்குமுக்காடிப் போன படக்குழு அதோ அந்த பறவை போல படத்தின் டீசர், டிரெய்லர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது. துருவங்கள் பதினாறு, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமூக கருத்துக்களை சார்ந்து உருவாகியுள்ள இந்த படத்தில் அமலா பால் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆடை படத்தில் அமலா பாலின் அசத்தல் நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், அதோ அந்த பறவை போல படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.