‘ராட்சசன்’ வெற்றிக்குப் பிறகு தனக்கு வரிசையாகப் படங்கள் வந்து குவியும் என்று அமலாபால் போட்டிருந்த கணக்கு பிணக்கு ஆகிவிட்டது. ஏற்கனவே நடித்துக்கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்துக்குப்பின்னர் வீட்டில் சும்மா உட்கார்ந்து பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கிறார்.

எதிர்பார்த்தபடி புதுப்படங்கள் கமிட் ஆகாததால்  செம அப்செட்டுக்கு ஆளானவர் ட்விட்டர் வலைதளத்தில் தம் அடிப்பது, கள் குடிப்பது, லுங்கியை மடித்துக்கட்டி கிளாமரில் கிறங்கடிப்பது போன்று எத்தனையோ வித்தைகள் காட்டியும் எதுவும் எடுபடவில்லை.

இந்நிலையில் ராட்சசன் ஹீரோ விஷ்ணு விஷால் மற்றும் அவரது மேனேஜர் பிரதீப் ஆகியோருடன் காதல், கள்ளக்காதல், திருட்டுக்கல்யாணம் என்று கிளம்பிய வதந்திகளும் அவரது மார்க்கெட் ஏற்றத்துக்கு கைகொடுக்கவில்லை. அடுத்தடுத்து வாய்ய்புகள் தருவதாகச் சொன்ன முன்னாள் நண்பர்கள்  தனுஷ் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர்  அமலா பாலின் போனையே அட்டெண்ட் செய்வதில்லையாம்.

ஸோ வீட்டிலேயே வெட்டியாக பொழுதுபோக்கிவரும் அமலா கன்னாபின்னாவென்று புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி வாய்ப்பு தேடிவருகிறார். இங்கே தனது செல்ல நாயோடு அவர் கொஞ்சிக்கொண்டிருப்பவை இன்று சற்றுமுன்னர் எடுக்கப்பட்டவை.