டாப்லெஸ் போட்டோ போட்ட அமலா பால்... அதிபுதிரியான இன்ஸ்டாகிராம்...!

பிரபல நடிகை அமலா பால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். சும்மா 4 பாட்டு, கிளாமர் ஆட்டம், ஹீரோ பின்னாடி லவ் பண்ணிட்டு சுத்துறதுன்னு இல்லாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த 'அம்மா கணக்கு',  'ஆடை' போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பு பெற்றன. 'ஆடை' படத்தில் எந்த ஹீரோயினும் செய்ய துணியாத காரியத்தை செய்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து அசத்தினர். இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த போதும், நல்ல படியாக ஓடியது. என்னதான் படத்தில் கிளாமர் பாட்டுக்கு குத்தாட்டம் போடலன்னாலும். அமலா பால் செம செக்ஸியான போட்டோ ஷுட்களை  நடத்தி, அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  

"ஆடை" படத்திற்கு "அதோ அந்த பறவை போல" என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் அமலா பால். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள படத்தில், கே.ஆர்.வினோத் என்பவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் வெளியிட உள்ளது. தற்போது இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பதிவிட்டுள்ள செக்ஸி போட்டோ செம வைரலாகி வருகிறது. 

காட்டுப்பகுதிக்குள் பூக்கள் நிறைந்த தொட்டிக்குள் குளிப்பது போன்ற புகைப்படத்தை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தொட்டியில் அமர்ந்த படி டாப்லெஸ்ஸாக தனது பின்னழகு மொத்தமும் தெரியும் படி உள்ள ஹாட் போட்டோ செம லைக்குகளை அள்ளி வருகிறது. தனது முதுகில் அழகான டாட்டூ ஒன்றை வரைத்துள்ள அமலா பால், அது முற்றிலும் தெரியும் படியாக செக்ஸி போஸ் கொடுத்துள்ளார். படத்திற்கு ஹீரோயின்கள் எப்படி எல்லாமோ புரோமோஷன் கொடுப்பாங்க, ஆனால் அமலா பால் கொடுத்துள்ள புதுவித புரோமோஷன் இன்ஸ்டாகிராமை அதிரிபுதியாக்கியுள்ளது.