Amala Paul complaint against a businessman after he approached and talked about sexual trade

தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது(sexual trade) போன்று பேசியதால் தொழில் அதிபர் மீது நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்த அடுத்த சில மணிநேரத்தில் அதிரடியாக அந்த நபரை கைது செய்தனர்.

கடந்த சில தினங்களாக நடன பயிற்சிக்காக நடிகை அமலா பால் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து உள்ளே வந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர், நடன பயிற்சி பெருபவர் போல் மிகவும் சகஜமாக பேசி அமலா பாலிடம் பாலியல் தொந்தரவு செய்ய முற்பட்டதாக அமலா பால் தற்போது திநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால், தொழிலதிபர் ஒருவர் என்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசினார் எனவும் செட்டில் இருப்பவர்கள் யாரோதான் அவரை என் ரூம்க்கு அனுப்பியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார். 

மேலும் மலேசியாவில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காக நான் நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் எனவும் நான் தனியாக இருக்கும்போது பாலியல் ரீதியாக டிரேட் பண்ணுகிற மாதிரி பேசினார் எனவும் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் அமலாபால் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி துரித நடவடிக்கைக்கு அமலாபால் தரப்பினர் நன்றி கூறியுள்ளனர். தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் குறித்து அமலாபால் கூறியபோது, 'பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்று ஆவேசமாக கூறினார்.