’நான் நிர்வாணமாக நடித்தது குறித்து நியாயமான கேள்விகள் எழுப்பினால் ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணனுடன் விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்’என்கிறார் நடிகை அமலா பால்.

மேயாத மான்படத்தை இயக்கிய ரத்னகுமார் ஆடைஎன்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கிய நிலையில், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி ஆடைபடம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து இரு தினங்களுக்கு முன்பு இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில்,... ஆடை படக்குழுவினருக்கு வாழ்த்துகள். படம் பார்க்கும்போது அமலாபாலின் கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக நடிகராக அல்ல. ஒரு பெண்ணாகவும், தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என்று  சொலவதெல்லாம் உண்மை’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் வம்பிழுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிறம், சாதி, கலாச்சாரத்தை தவிர்த்து மனிதம் வளர்க்க அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். மதம், சாதி நம்பிக்கையால் ஏராளமான அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். சமீபகாலமாக உலகில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.ஒருத்தரை ஒருத்தர் மனிதாக பார்க்க வேண்டும் என்ற செய்தி சமூகத்தில் பரவ வேண்டும். ஒரு உண்மையான மனிதம் எது என்பதை பெரும்பாலும் வயதான பிறகே நாம் உணர்கிறோம். இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படப்போகும் படங்கள் அனைவரையும் ஈர்க்கும் என நான் நம்புகிறேன். மைனா படம் முதல் ஆடை படம் வரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி’என்றார்.

பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவு குறித்துக்கேட்டபோது, அவரது கோரிக்கையின் நோக்கம் புரியவில்லை. என் நிர்வாண நடிப்பு குறித்து நியாயமாக விவாதிக்க விரும்பினால் நானும் அவரை சந்தித்துப்பேசத் தயாராகவே இருக்கிறேன்’என்றார்.