amala paul acting aram type movie
நடிகை அமலாபால், அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் நடித்த அனுபவம் பற்றி தற்போது அமலாபால் மனம் திறந்து கூறியுள்ளர்.
‘‘இந்த படத்தில் காரைக்குடி பெண்ணாக நடித்திருக்கிறேன். மூக்குத்தி, பாவாடை தாவணி, புடவை அணிந்து வருகிறேன். குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் படமாக சசிகணேசன் இதை இயக்கி இருக்கிறார். எப்போதும் வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் படமாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இன்றைய காலத்தை சிறந்ததாக கருதுகிறேன். ஒரு உதவி இயக்குனரை போல் எல்லா வேலைகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கதை, படத்தொகுப்பு, இயக்கம் எல்லாவற்றையும் கவனமாக பார்ப்பேன். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ கலகலப்பான படம். இதில் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அரவிந்சாமி. நிறைய விஷயங்கள் குறித்து அவரிடம் கலந்து பேசுவேன். இந்த படத்திற்காக சொந்த குரலில் பேசியிருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் தற்போது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. சமீபத்தில் நயன்தாரா நடித்த அறம் படத்திற்கும் ரசிகர்கள் பலர் ஆதரவு கொடுத்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் தானும் நயன்தாரா நடித்த அறம் படத்தின் சாயலில் 'அதோ அந்த பறவை' என்ற படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.
