இன்று வெளியிடப்பட்டுள்ள அமலா பாலின் ‘ஆடை’படத்தில் அவர் முழு நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்படத்தில் அவரது காஷ்ட்யூம் டிசனர் யாருப்பா?’ என்று வலைதளங்களில் மக்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜி சுப்பிரமணியன் தயாரிப்பில் ‘மேயாத மான்’ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. ஏற்கனவே கிழிசலான உடைகளுடன் அமலா பால் அலங்கோலமாகக் காட்சி அளித்த இப்படத்தின் டிசைன்களே பெரும் அதிர்வுக்குள்ளாகியிருந்த நிலையில், இன்று வெளியாகியிருக்கும் அமலாபாலின் நிர்வாண கோலம் கொண்ட டீஸர் பார்ப்பவர்களை படு பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘சுதந்திரம் என்பது மற்றவர்கள் உனக்கு என்ன செய்தார்களோ அதை நீ அவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதில் இருக்கிறது’ என்ற சார்த்தரின் தத்துவதோடு தொடங்கும் அந்த ட்ரெயிலரில் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் தேடல் குறித்துப் பேசுகிறது. இப்படம் குறித்த சர்ச்சைகள் பற்றிப்பரவிக்கொண்டிருக்கும் நிலையில்,’ஆடை’படம் மிக விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் உங்கள் அன்புக்குரிய அமலா பாலை வாழ்த்துங்கள்’என்று ட்விட் பண்ணியிருக்கிறார் அமலா பால்.