தமிழ் திரையுலக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, திரைப்படங்களாக விக்ரமின் 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'ஆடை' ஆகிய படங்கள் இன்று வெளியாகிறது.

இவ்விரு படங்களுக்கான ப்ரோமோஷன் பணிகள், கடந்த சில வாரங்களாகவே நடந்து வந்து நாம் அறிந்தது தான். 

இந்நிலையில், திட்டமிட்ட படி நடிகர் விக்ரம், கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களும் இந்த படம் குறித்த கருத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால், அமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், திடீர் என காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 'ஆடை' படத்தின் தயாரிப்பாளருக்கு, ஏற்பட்ட பைனான்ஸ்  பிரச்சனை காரணமாக காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால், இன்றைய முதல் காட்சிக்கு ஆன்லைன், மற்றும் வெகு தூரத்தில் இருந்து வைத்து ஆடை படத்தை பார்க்க டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினார். எனினும் மதியத்திற்குள் பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.