am not leave congress party kushboo speech
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் குஷ்பூ. தன் மனதில்பட்டதை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசுபவர். சினிமா மட்டுமல்ல அரசியல் சமுக விழிப்புணர்வு போன்ற விஷயங்களிலும் இதே நிலைப்பாடு தான். அதனாலேயே குஷ்பூவிற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. தற்போது தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுள்ளார். தி. மூ. க வில் இருந்து பிரிந்து காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். காங்கிரஸில் பிரிந்து வேறு கட்சிக்கு மாறுகிறார் என்று குஷ்பூவை பற்றி ஒரு வதந்தி பரவி உள்ளது. அது வதந்தி தான் என்று குஷ்பூ தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதாவது அரசியலில் இருந்து வெளியேறினாலும் வெளியேறுவேனே தவிர காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் தான்தான் கடைசிவரை இருப்பேன். அந்த நிலைபாட்டில் இருந்து மாற்று இல்லை என கூறி உள்ளார்.
