நல்ல பையன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் நீங்களே ஒரு நல்ல பையனை பார்த்து கொடுத்தால் நாட் ரெடி என பத்திரிக்கையாளர்களிடத்தல் நடிகை தமன்னா கூறியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த தமன்னாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர் அப்போது சினிமாத்துறையில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்க காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  13 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறேன்,  இந்த ஆண்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டு என்றே கருதுகிறேன், 

நான் கதாநாயகியாக நடித்த கண்ணே கலைமானே, சைரா,  ஆக்சன்,  பெட்ரோமாக்ஸ் ,  உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகியுள்ளன அவற்றில் தெலுங்கில் ஒரு படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதாலும்,  தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு ஆதரவு தருவதாலும் நான் நிலைத்து நிற்கிறேன் .  தற்போது புதுமுக நடிகைகள் நிறையபேர் வருவதைப் பற்றி கேட்டதற்கு,  நான் எப்போதுமே யாரையும் போட்டியாக நினைத்தது கிடையாது புதுமுகங்கள் சினிமாத்துறைக்கு வருவது நல்லதுதானே தொடர்ந்து நான் சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.  அதுவும் நல்ல கதையம்சம் கொண்ட தரமான புதுப்புது கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.  ரஜினி கமல்ஹாசனுடன்  சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக  வலைதளத்தில் வெளியிட்டு உள்ளீர்கள் அவர்களுடன் நடிக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு,  அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்துப் பார்த்திருக்கிறேன்.  இருவரையும் நான் கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன்.  அவர்களுடன் நடிக்க யார்தான் மாட்டேன் என்பார்கள்.? 

ரஜினி கமலுக்கு ஏற்ற பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் நிச்சயம் அவர்களுடன் நடிப்பேன்,  ரஜினி கமல் போல உங்களுக்கு அரசியலில் இறங்க ஆசை உள்ளதா என்று கேட்டதற்கு ரஜினி கமலை பற்றி மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் உள்ளது அவர்கள் இருவரும் மக்களுக்கு சேவை செய்வார்கள் என நம்புகிறேன்.  ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் அளவிற்கு பொறுப்பு இல்லை என்றார்.  அத்துடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  நல்ல பையன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்.  நீங்களே நல்ல பையனை தேடி கொடுத்தால் , திருமணத் செய்துகொள்ள நான் ரெடி என அவர் தெரிவித்துள்ளார்.