விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த தொடரில் கணவன், மனைவியாக நடித்த இவர்கள் இருவருமே தற்போது உண்மையாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் காதலுக்கு அடையாளமாக, சமீபத்தில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. மார்ச் 20 ஆம் தேதி பிறந்த இவர்களுடைய குழந்தைக்கு ஆல்யா சயீத் என பெயர் வைத்துள்ளனர். மேலும் தங்களுடைய குழந்தை பிறப்பதற்கு முன், அழகிய கார் ஒன்றையும் இந்த தம்பதி வாங்கினார்கள்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்கள், அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

சமீபத்தில் கூட தங்கள் குழந்தையின் கையை பிடித்தவாறு இவர்கள் பதிவிட்ட புகைப்படம், இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகியது. இதை தொடர்ந்து, குழந்தை பிறந்த பின் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்து இவர்களுடைய ரசிகர்கள், கடைசி வரை இப்படியே அன்பாக இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ...