all womans like sunnyleyon director controversy twit

மகளிர் தினமான நேற்று அனைத்து துறைகளை சேர்த்து பிரபலங்களும், பெண்களை போற்றும் வகையில் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சர்ச்சை இயக்குனர் என்று கூறப்படும் ராம் கோபால் வர்மா, பெண்களை இழிவு படுத்துவது போல ஒரு கருத்து கூறியிருந்தார், அது அணைத்து பெண்களும் சன்னி லியோன் போல் இருக்க வேண்டும் என்பது தான்.

இதற்கு பிரபல நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், உங்களுடைய தாய் மற்றும் சகோதரிக்கும் இது பொருந்துமா என்பது போல் பதிலடி கொடுத்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி ஒரு பதிலடி கொடுத்து தாக்கியதை பலரும் வரவேற்றுள்ளனர்.