கைது

மும்பையில் கடந்த 1993 ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அதன்பின் இவர் கடந்த 2016 ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.தற்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகை

இந்நிலையில் சஞ்சய் தத் மீது தீராத காதல் கொண்ட ரசிகை ஒருவர் தனது சொத்து முழுவதையும் அவருக்கே எழுதி வைத்துள்ளார்.மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் நிஷி ஹரிச்சந்திர என்ற பெண் சஞ்சய் தத்தின் அதி தீவிர ரசிகையாவார்.

உயில்

தனது தாயுடன் வசித்து வந்த இவர் சமீபத்தில் நோய் வாய்ப்பட்டு இறந்தார்.அவரது வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது வங்கி கணக்கில் இருக்கும் பணம் மற்றும் லாக்கரில் இருக்கும் அனைத்து பொருட்களும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்துள்ளது தெரிய வந்தது.
அன்பு

இந்த தகவலை கேள்விப்பட்ட சஞ்சய் தத் தனக்கு இப்படிப்பட்ட ரசிகையா என அவரது அன்பில் நெகிழ்ந்து போனாராம்.மேலும் தன் பெயரில் எழுதி வைத்துள்ள அனைத்தையும் அவரது குடும்பத்தினருக்கே திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்தாராம் சஞ்சய் தத்.