சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான, 'சும்மா கிழி' பாடல், கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகி ரஜினி ரசிகர்களை கவர்ந்தது.

எனினும் இந்த பாடல், பிரபல பக்தி பாடகர் ஸ்ரீஹரி பாடி நடித்த 'கட்டோடு கட்டும் கட்டு' பாடலின் இசையோடு ஒப்பிடப்பட்டு பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது.

இந்நிலையில், பிரபல இணையதள ஊடகம் ஒன்று விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களின் நடனத்தை 'சும்மா கிழி' பாடலுடன் மேஷ்அப் செய்து வெளியிட்டுள்ளது. 

இதனை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்து, அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, பாராட்டியுள்ளார். மேலும் இந்த மேஷ்அப்பை பார்த்து பல ரசிகர்களுக்கும், மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.