நேற்று வெளியான ஷங்கர், ரஜினி கூட்டணியின் ‘2.0’ ரிசல்ட் ஹிட், பரவாயில்லை, சுமார், சொதப்பல் என்று சகலமும் கலந்தவையாகவே வந்துகொண்டுள்ளது. துவக்கத்தில் ‘பகுபலி 2’ படத்தின் வசூலை மிஞ்சுமா என்ற விவாதங்கள் தரை மட்டத்துக்கு வந்து விஜய்யின் ‘சர்கார்’ வசூலை சமன் செய்யுமா என்கிற அளவுக்கு வந்திருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளியன்று வெளியான ’சர்கார்’ படம் 22 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 22 திரையரங்குகளில் 74 திரைகள், 336 காட்சிகள் என விஜயின் பழைய பட ரெகார்டுகளை முறியடித்து  வெளியானது. அதனால் ரஜினியின் ’2.0’ படம் அதைவிடவும் அதிகத் திரையரங்குகள், அதிகக் காட்சிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சென்னையில், 23 திரையரங்குகளில் வெளியாகியுள்ள ’2.0’ படம்,  73 திரைகள், 320 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. (உதாரணமாக, சத்யம் திரையரங்கில் 6 திரைகளும் 25 காட்சிகளும், தேவி திரையரங்கில் 4 திரைகளும் 20 காட்சிகளும் இப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன). எஸ்கேப்-பில் ’2.0’ படத்தின் ஹிந்திப் பதிப்பு 2 காட்சிகளிலும் கேசினோவில் தெலுங்குப் பதிப்பு 4 காட்சிகளிலும் வெளியாகியுள்ளன.

தியேட்டர்களின் எண்ணிக்கை விவகாரத்திலேயே இப்படி ஒரு பின்னடைவை சந்தித்த ‘2.0’  சென்னையில் வசூலிலும் அந்த சர்காரை எட்டுமா என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்துள்ளது திரையரங்க உரிமையாளர் வட்டாரம். 

படத்தின் ரிப்போர்ட் ரிலீஸுக்குப் பின்னர் மிகவும் கலவையாக மாறிவிட்டதும், கதையில் வில்லன் கேரக்டர் ஹீரோவை விட நல்லவனாக இருப்பதும், திகட்டும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் பெரும் பலவீனங்களாக சொல்லப்படுகின்றன.

இந்தியிலும் படத்தின் ரிப்போர்ட் தமிழில் உள்ளது போலவே ஆவரேஜ் என்று, ஆந்திர ரசிகர்கள்,ஷங்கரை மக்கள் ராஜமவுலியுடன் ஒப்பிட்டுப் பேசியதால்தானோ என்னவோ சூப்பர் டூப்பர் ஃப்ளாப் என்று அறிவித்திருக்கிறார்கள்.