பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி, இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், முதல் போட்டியாளராக இரண்டாவது வாரத்தில், செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவும், அவரை தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில், நடிகை வனிதாவும் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள், வயல் கார்டு சுற்று மூலமோ, அல்லது நேரடியாக போட்டியாளராகவோ...  17 வது போட்டியாளராக 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமான ஆலியா மானசா கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

அதற்கு ஏற்றாப்போல் இவர் விஜய் டிவியில் நடித்து வந்த, ராஜா ராணி சீரியல் முடிவடைந்துள்ளது. இதனை உறுதி படுத்தும் விதமாக, ராஜா ராணி சீரியல் நடிகர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

ஒருவேளை, ஆலியா மானசா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால்... லாஸ்லியாவின் மீது உள்ள பலரது கவனமும் இவர் மீது திரும்ப வாய்ப்பு உள்ளது. இவருக்கு ஏற்கனவே பல ரசிகர்கள் உள்ளதால். இவர் லாஸ்லியாவிற்கு சரியான போட்டியாக இருப்பர் என எதிர்பார்க்கலாம்.