Alcohol in Sridevis blood More information on post mortem report
துபாயில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாகவும் மேலும் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
தன் உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிந்தார்.
அப்போது மாரடைப்பின் காரணமாக திடீரென ஸ்ரீதேவி உயிரிழந்தாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ தேவியின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களான ரஜினி கமல் மற்றும் மேலும் பல நட்சத்திரங்கள் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை விரைந்துள்ளனர்.
இதன் இடையே,ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில், இறுதி சடங்கிற்காக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், துபாயில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை என தடவியல் அறிக்கையில் கூறியிருப்பதாக கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மதுபானத்தை அவரே எடுத்துகொண்டாரா என்பது குறித்து இனிதான் தெரியவரும்.
இதையடுத்து ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு பின்னர் ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டதையடுத்து அவரின் உடல் இந்தியா கொண்டுவரப்படும்.
