alaya manasa without make up photo

வெள்ளித்திரை படங்களை காட்டிலும் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. 

இதுபோன்ற சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்புகளும் கிடைக்கிறது. மேலும் சின்னத்திரை புகழை வைத்து அவர்கள் வெள்ளி திரையிலும் கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை 'ராஜா ராணி' ஆல்யா மானசா.

இந்த சீரியலில் செம்பாவாக நடிக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் நாளுக்கு நாள் இவரை சமூக வலைதளங்களில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

இந்நிலையில் இவர் இன்றைய பொழுது மேக்கப் இல்லாமல் துவங்குகிறது என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படத்தில் இவர் மிகவும் அழகாக தான் தெரிகிறார் என பல ரசிகர்கள் கூறியுள்ளனர்.

சிலர் மேக்கப் இல்லை என்று சொல்லிவிட்டு, 'லிப்ஸ்டிக்', 'ஐ லாஷ்' போன்றவை வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.

View post on Instagram