தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின், வெயிட்டான கதாப்பாத்திரத்தை மட்டுமே குறி வைத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் 'தேவி' வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதே குழுவினர் இரண்டாம் பாகத்தை எடுப்பதிலும் இறங்கினர். 

அதன்படி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தமன்னா, பிரபுதேவா, நந்திதா, ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் 'தேவி 2 ' திரைப்படம் வெளியானது.  முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ஆனால் படத்தில் காமெடி காட்சியில் தமன்னா தூள் கிளப்பியுள்ளார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். 

இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம்,  திருமணம் குறித்து கேள்வி  எழுப்பியபோது, எனக்கு ஏற்ற போல் மாப்பிள்ளை கிடைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வேன். இயக்குனர் ஏ.எல். விஜயிடம் கூட தனக்கு ஏற்ற போல் மாப்பிள்ளை இருந்தால் பார்த்து சொல்லுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.