ஹீரோயினாக அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துவரும் 'அக்னிச் சிறகுகள்' படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 43 நாட்களாக கஜகஸ்தானில் நடைபெற்று வந்தது. 

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் 'அக்னிச் சிறகுகள்'தானாம். அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். 


இந்த நிலையில், படத்தில் நடிக்கும் கேரக்டர்களின் லுக்குகளை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. முதலில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் லுக்கை படக்குழு நேற்று (நவ.20) வெளியிட்டது. 

இந்தப் படத்தில் ‘சீனு’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அவரது வித்தியாசமான கேரக்டர் லுக் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, அக்ஷரா ஹாசனின் கேரக்டர் பெயர் என்னவென்று யூகியுங்கள் - இன்று (நவ.21) மாலை 5 மணிக்கு கேரக்டர் லுக் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. 

விஜய் ஆண்டனியின் கேரக்டர் சீனு, அப்போ, அக்ஷரா ஹாசனின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்தனர். இந்நிலையில், 'அக்னிச் சிறகுகள்' படத்தில் அக்ஷரா ஹாசனின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர், விஜி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். 

அக்ஷரா ஹாசனின் ஸ்டைலிசான இந்த கேரக்டர் லுக், சமூகவலை தளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து, அருண் விஜய் உள்ளிட்டோரின் கேரக்டர் லுக்கை அடுத்தடுத்து படக்குழு வெளியிடவுள்ளது. 'அக்னிச் சிறகுகள்' படத்தின் இந்த ப்ரமோஷன் யுக்தி, அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.