Asianet News TamilAsianet News Tamil

அக்கினி சிறகுகள் படத்தில் விஜய் ஆன்டனியை மட்டும் இல்ல அக்ஷரா வேற கெட்டப்பில்..! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்..!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், என தமிழ் திரையுலகில் பல்வேறு திறமைகளோடு விளங்கும், இயக்குனர் நவீன் தற்போது 'அக்னி சிறகுகள்' என்ற படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
 

aksharahassan new getup in agnisiragugal movie first look
Author
Chennai, First Published Nov 21, 2019, 6:35 PM IST

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், என தமிழ் திரையுலகில் பல்வேறு திறமைகளோடு விளங்கும், இயக்குனர் நவீன் தற்போது 'அக்னி சிறகுகள்' என்ற படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்ஷர ஹாசன், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பா நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

aksharahassan new getup in agnisiragugal movie first look

இந்நிலையில் இன்று காலை அ'க்னி சிறகுகள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும், இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனியின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியானது. சீனு என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் இருந்தார்.

 

இதைத்தொடர்ந்து இன்றையதினமே  அக்ஷரா ஹாசன் கதாபாத்திரத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷர ஹாசன் நீளமான முடியோடு இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கெட்டப்பில் இருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios