aksharahassan have a pregnant young girl character

துணை இயக்குனராக பல படங்களில் கலக்கிவந்த கமலின் இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் இவரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அக்‌ஷரா ஹாசனும் அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததுதான்.

மேலும் இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் ஒரு ஹிந்திப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் இவர் சிறு வயதிலேயே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார், இதுக்குறித்து இவர் கூறுகையில் இது சவாலான கேரக்டர் என்றும் மனதளவில் சில விஷயங்களில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என்பதால் நடிக்க சம்மதித்தேன்’ என தெரிவித்துள்ளார்.