பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதனால் அதிர்ச்சியடைந்த அக்சராஹாசன் இது குறித்து மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அக்சராஹாசனின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் போஸிலிஸார். அந்த வகையில் தற்போது அக்ஷராஹாசனின்  முன்னாள் காதலர் தனுஜ் விர்வானியிடம் விசாரணை நடப்பதாக தெரிகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக தனுஜ்-அக்சரா காதலித்து வந்ததாகவும், அந்த சமயத்தில் அக்சரா தன்னுடைய சில அந்தரங்க புகைப்படங்களை   தனுஜிடம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசார் தனுஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தனுஜின் செய்தித்தொடர்பாளர்  கூறியதாவது: அக்சரா தனது புகைப்படங்கள் லீக் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பல வருடங்கள் அக்சராவும் தனுஜும் டேட்டிங் செய்தது உண்மைதான். ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து நண்பர்களாக உள்ளார்கள். இருப்பினும் இப்போதும் அவர்கள் இருவரும் நல்லமுறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட ஒருவருடமாகிறது. அக்சரா எதிர்கொண்ட இந்தப் பிரச்னையை தனுஜ் நன்கு அறிவார். காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தனுஜ்  தயாராக உள்ளார். குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்' என்று கூறியுள்ளார்.