நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம். உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' . 

இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் நாசரின் மூன்றாவது மகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தில்,  நடித்ததை தொடர்ந்து தற்போது மிகவும் துணிச்சலான கர்ப்பிணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  இந்த படம் குறித்து அக்ஷரா ஹாசன் பேசுகையில்... இந்த படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடிப்பதற்கு தன்னுடைய தாயிடம் தான் பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணி பெண் போல் நடிப்பதற்காக,  சிறுசிறு சைகைகள் செய்து காட்டி தனக்கு உதவியவர் தன்னுடைய அம்மா சரிகா என தெரிவித்துள்ளார் அக்ஷரா.