akshara hassan chater in veveham leeked

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விவேகம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக இந்த படத்தின் வியாபாரம் உலக அளவில் பெரும் சாதனைய நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வரும் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனின் கேரக்டர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. 

அக்சராஹாசன் இந்த படத்தில் வேவுபார்க்கும் உளவாளியாக நடிப்பதாகவும், அவரை உலகின் மிகப்பெரிய கொடூரமான ஒரு நெட்வொர்க் கடத்தி செல்வதாகவும், அவரை மீட்க அஜித் செய்யும் அதிரடி நடவடிக்கைகள் தான் படத்தின் மெயின் கதை என்றும் கூறப்படுகிறது.