நடிகை அக்‌ஷரா கௌவுடா அஜித் நடித்த ஆரம்பம், ஜெயம் ரவியுடன் போகன் ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார். 

இவர் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் இவருக்கு நேர்ந்த சோகம் குறித்து பேசியுள்ளார். அதில் நான் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தேன் இது தான் உலகிலேயே மிக கொடிய வியாதி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இரவெல்லாம் தூங்க முடியாமல், மனஅழுத்ததால் பல சிரமங்களை உணர்ந்தேன் . இத்தனைக்கும் விட்டில் எந்த பிரச்சனையும் கிடையாது. இதை அப்படியே விடக்கூடாது என அமெரிக்கா சென்று மருத்துவரிடம் 6 மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

முதலில் மன அழுத்த மருந்துகளுக்கு அடிமையாகி விடுவேனோ என பயந்தேன். பின் புரிந்து கொண்டேன். எண்ணங்களை எப்படி கையாள்வது என மருத்துவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

மன அழுத்தத்திலிருந்து மீள்வதாக நினைத்து நம்மை பிசியாக மாற்றிக்கொள்கிறோம். இது தவறு,  எப்போது பிசியாக இருக்கும் ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மன அழுத்தத்தால் தான் இறந்து போனார்.

அப்போதே போராடியதால் தான் மீண்டு வந்துள்ளேன். இல்லையெனில் இறந்திருப்பேன் என அவர் கூறினார்...