இந்தப் படத்தில், 'ஸ்டைலிஷ் தமிழச்சியே' என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள். 
அதன்பின், ஜெயம்ரவியின் 'போகன்' படத்தில் நடித்த அக்ஷரா கவுடா, கடைசியாக 'மாயவன்' படத்தில் நடித்திருந்தார். 

சொல்லிக்கொள்ளும்படி தமிழில் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது கன்னடம், இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், அவ்வப்போது ஹாட்டாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அந்த கிளுகிளு புகைப்படங்களை சமூக வலைத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு, நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட செம ஹாட்டான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்தார். இந்த புகைப்படங்களை பார்த்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள், தற்போது அடுத்த பிகினி படங்களை சமூக வலைதள பக்கங்களில் பரவவிட்டு ரசிகர்களை திக்குமுக்கடாச் செய்துள்ளார். 


இந்த முறை கடற்கரையோரம் நீல நிற பிகினி உடையில் ஆனந்த நீராடியபடி அக்ஷரா கொடுத்திருக்கும் ஹாட் போஸ்கள், ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது. இதில் ஒரு புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா கவுடா பகிர்ந்துள்ளார். 

கடற்கரை மண்ணில் அக்ஷரா என எழுதியிருக்க, சாவகாசமாக கால் நீட்டி அமர்ந்தபடி, ஆகாயத்தை புன்னகையுடன் பார்த்து போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. "பிரபஞ்சத்துடன் பேசுங்கள். 

அதன் பதிலைக் கேளுங்கள். இயற்கையோடு நெருக்கமாக இருங்கள். வாழ்க்கையில் எல்லாம் பாருங்கள். பிரபஞ்சத்தின் குழந்தை போல உங்களை அழைத்துச் செல்லுங்கள்..!" என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படத்துக்கும், ரசிகர்கள் தங்களது மனசு போல் லைக்குகளையும் வாரி கொடுத்து வருகின்றனர். 


அப்போது நீச்சள் குளம், இப்போது கடற்கரை என அடுத்தடுத்து ஃபோட்டோ ஷுட் நடத்தி வரிசையாக பிகினி புகைப்படங்களாகவே போட்டு இளசுகளை தாக்கிவரும் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அக்ஷரா கவுடா, அடுத்து எங்கு ஃபோட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவாரோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.