akshaikumar salary for 2.0 movie

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2 . 0 . இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி, எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டே வருகிறது. 

அப்படிதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு சம்பளம் எவ்வளவு என தற்போது வெளியாகியுள்ளது, இவருக்கு சம்பளம் ஒரு நாள் கணக்கில் பேசப்பட்டுள்ளதாம். 

அதன்படி, நாள் ஒன்றுக்கு அக்ஷய்குமாரின் சம்பளம் ரூ.2 கோடியாம். தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 

இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. ஐமேக்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறதும். தமிழில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.