சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 900 ஐ எட்டியுள்ளது கொரோனா வைராசல் பாதிக்க பட்டவரின் எண்ணிக்கை. பலி எண்ணிக்கை  20 ஐ தொட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கோரோனோ பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, பாரத பிரதமர் மோடி , நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் பல பிரபலங்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் நிதியை அறிவித்து வருகிறார்கள், ஏற்கனவே பிரபல நடிகர் பிரபாஸ், 3 கோடி பிரதமரின் நிதிக்கு அளித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி வழங்கியுள்ளார்.