பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தை உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தற்போது பிஸியாக அரை டசன் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார், இந்நிலையில் பலர் ஆண்களுக்கு தெரியாமல் மறைத்து வாங்கி செல்லும் சானிட்டரி நாப்கின் , மைய படுத்திய கதையில் ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குனர் பால்கி இயகிக்கும் இந்த படத்தை, அக்ஷய்குமாரின் மனைவி ட்வின்கள் கண்ணா தயாரிக்கிறார்.

மேலும் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்த்த அருணாச்சல முருகானந்தம் வாழ்க்கையை மைய படுத்தி இந்த திரைப்படம் எடுக்க படுகிறது.

மார்ச் மதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி இந்த வருட இறுதிக்குள் முடிக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர் .

தற்போது இந்த படத்திற்கு 'பேடு மேன்' என பெயர் வைத்துள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்த்த சாதனையாளர் அண்ணாமலை முருகானந்தன்' வாழ்க்கையை பற்றி கோலிவுட் இயக்குனர்கள் முன் வராத நிலையில் , பாலிவுட் இயக்குனர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அவருக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்.