வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61 படத்தின் படப்பிடிப்பு துவக்க தேதி மற்றும் ரிலீஸ் தேதி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் போனி கபூர்.. 

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் உருவான படம் தான் வலிமை..நேர்கொண்ட பார்வையில் வக்கீலாக அஜித் நடித்திருந்தார். நாகரிக உலக பெண்களுக்காக குரல்கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் எந்தவித ஆரவாரமும் இன்றி அஜித் நடித்திருப்பார். இந்த படத்தைத்தொடர்ந்து அஜித்தை வைத்து மீண்டும் H வினோத் இயக்க தானே தயாரிக்கவுள்ளதாக போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 அரை வருடங்களாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. வலிமை என்கிற டைட்டலுடன் முதல்பார்வை போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களில் துவங்கி அரசியல் பிரமுகர்கள் முதலமைச்சர், அமைச்சர்கள், என கண்ணில் படும் பிரபலங்கள் அனைவரிடமும் வலிமை அப்டேட் கோரிக்கை வைத்தனர்.கொஞ்சம் ஆர்வக்கோளாறில் சென்னை வந்த பிரதமரையும் விட்டு வைக்காத ரசிகர்கள் அவரது கார் முன்னர் வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதோடு விட்டார்களா திருச்செந்தூர் முருகன் கோவிலில் பேனரே முடித்துவிட்டனர்..இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான அஜித் ..இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் என கோரிக்கை விடுத்தார். பின்னர் வலிமை குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாக இறுதியில் டிரைலரும் வெளியானது. இதையடுத்து பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்ட்ட வலிமைக்கு மேலும் சோதனையாக கொரோன கட்டுப்பாடுகள் அதிகரிக்க ரிலீஸ் தள்ளிப்போனது..இப்படி ஏகபோக சிக்கலுக்கு பின்னர் கடந்த 2ற -ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட்ட வலிமை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையே மீண்டும் இந்த கூட்டணி அமையவுள்ளதை போனிகபூர் அறிவித்தார். AK 61 என்கிற பெயரில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இதில் அஜித் லுக் குறித்த படங்கள் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஒருவழியாக வலிமை பரபரப்பு குறைந்த நிலையில் தற்போது போனிகபூர் ஹாப்பி பாம் போட்டுள்ளாராம். அதாவதுஇன்னும் பெயரிடப்படாத AK 61 படப்பிடிப்பு வருகிற 9 தேதி முதல் துவங்க உள்ளதாகவும்..தீபாவளி விருந்தாக படம் வெளியாக உள்ளதாக தகவல் உலா வருகிறது. இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.