மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடிப்பில் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள விடாமுயற்சி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

தடம், தடையறத் தாக்க, மீகாமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. அவர் முதன்முறையாக நடிகர் அஜித்குமார் உடன் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது. விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுன் மிரட்டி இருக்கின்றனர். வில்லி கதாபாத்திரத்தில் ரெஜினா கசெண்ட்ரா நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஹாலிவுட்டின் பிரேக்டவுன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது. இங்குமட்டும் சுமார் 1000 திரைகளுக்கு மேல் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்.... விடாமுயற்சி ஃப்ரீ புக்கிங் சேல்ஸ்; இந்திய அளவில் அஜித்தின் மாஸை உறுதி செய்த 8 சிட்டிஸ்!

தலைசிறந்த சஸ்பென்ஸ் திரைப்படமாக விடாமுயற்சி உள்ளது. திறம்பட உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை ஒரு சிறந்த சர்வைவல் திரில்லர் படத்தைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் பதற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக அஜித்தின் அர்ஜுன் கதாபாத்திரம் மனைவியை தொலைத்துவிட்டு தேடும் போது வரும் ட்விஸ்ட் ஆடியன்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிப்போட்டுள்ளது. அஜித்தின் நடிப்புக்கு ஈடு இணையே இல்லை. அனிருத்தின் இசை திரில்லர் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒரு மாயாஜாலாமான புதிய அனுபவமாக உள்ளது இந்த விடாமுயற்சி.

Scroll to load tweet…

விடாமுயற்சி ஸ்டைலிஷ் திரைக்கதை உடன் கூடிய ஒரு வித்தியாசமான முயற்சி. அஜித் போன்ற மாஸ் ஹீரோவுக்கு ஒரு பில்டப் காட்சிகள் கூட இல்லாவிட்டாலும் படம் விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்குடனும் நகர்கிறது. இது வழக்கமான மசாலா மாஸ் படம் கிடையாது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பதிவிட்டிருக்கிறார்.

Scroll to load tweet…

விடாமுயற்சி நல்ல படம் ஆனால் அஜித்திடம் இருந்து இன்னும் எதிர்பார்த்தேன். பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் ஆனால் அதில் அஜித் - திரிஷாவின் கதை சேர்க்கப்பட்டுள்ளது. சிம்பிளான திரைக்கதை, அனைத்து நடிகர்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் அருமையாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.

Scroll to load tweet…

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு நிறைய லுக் இருக்கிறது. அவை அனைத்துமே முதல் 30 நிமிடங்களில் வந்துவிடுகிறது. அஜித்தின் நடிப்பு பிரம்மிப்பூட்டுகிறது. அஜித் - திரிஷா ஜோடி அருமை. ஆனால் முதல் பாதியின் முடிவில் சில ட்விஸ்ட்கள் இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

விடாமுயற்சி படத்தின் இரண்டாம் பாதியை விட முதல் பாதி அருமையாக இருந்தது. திரில்லர் படம் தான் ஆனார் மெதுவாக கதை நகர்கிறது. படத்தில் ட்விஸ்ட் அருமையாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தில் உள்ள ஒரே பிரச்சனை இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது தான். மற்றபடி நல்ல படம் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்.... த்ரிஷா தான் விடாமுயற்சி படத்தின் வில்லியா? உளறிய பிரபலம் - டீ கோட் செய்த ரசிகர்கள்!