Asianet News TamilAsianet News Tamil

நெவர் எவர் கிவ் அப் சொல்லும் அஜித்; பத்து மில்லியனை நோக்கி நகர்கிறது விவேகம்…

Ajith who says Never Give Me Up Moving towards ten million ...
ajith who-says-never-give-me-up-moving-towards-ten-mill
Author
First Published May 13, 2017, 12:02 PM IST


சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய விவேகம் படத்தின் டீசர், 10 மில்லியன் வியூவ்ஸை நெருங்கி வருகிறது.

அஜித்தின் விவேகம் டீஸர் 57 நொடிகள் மட்டுமே ஓடக்கூடியது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்ட இந்த டீசர், தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் பெற்ற பார்வையை, விவேகம் டீசர் வெறும் 12 மணி நேரத்தில் முறியடித்தது.

10 மில்லியன் பார்வைகளை விவேகம் டீசர் பெறும்போது, அது தமிழ் சினிமா டீசர்களில் புதிய சாதனை பட்டியலில் இடம்பெறும்.

ajith who-says-never-give-me-up-moving-towards-ten-mill

தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விவேகம் திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையானால், அஜித் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது என்ற பெருமையை விவேகம் பெறும். மேலும்,  யூடியூபின் டாப் 10 டிரெண்டிங்கில் விவேகம் 79 லட்சம் பார்வையாளர்களுடன் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருக்கிறது. டீசர் வெளியாகி கிட்டத்தட்ட 48 மணி நேரங்கள் வரை டிரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது

வேகமாக, விவேகம் இந்த பெருமையை பெற வாழ்த்துகள்…

Follow Us:
Download App:
  • android
  • ios