தெலுங்கில் வெளியாகும் அஜித்தின் விவேகம் படத்திற்கு புதிதாக சிக்கல் ஒன்று முளைத்துள்ளது.

அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளிவர இருக்கும் விவேகம் படத்தில் அவருக்கு ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் இதுவரை சர்வைவா, தலை விடுதலை, காதலாட ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தின் தெலுங்கு ரிலீசுக்கு புது வில்லங்கம் முறைத்துள்ளது. விவேகம் ரிலீஸ் ஆகும் அதே நாளில், தெலுங்கில் பாகுபலி புகழ் ராணா நடித்த 'நேனே ராஜா நேனே மந்திரி' படம் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ராணாவுக்கு ஜோடி காஜல்தான்.

தெலுங்கில் ராணாவுக்கு அஜித்தை விட அதிகமான மார்க்கெட் இருப்பதால், ராணா படத்துடன் விவேகத்தை ரிலீஸ் செய்தால் வசூல் படுத்துவிடுமோ என்று படக்குழு யோசனையில் உள்ளது.