Ajith Vivegam teaser beats Rajini Kabali

சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விவேகம்’ பட டீசர் கடந்த மே 11 தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

அஜித்தின் 57 வது படமான ‘விவேகம்’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வில்லனாக விவேக் ஒபராய், முக்கிய கதாபத்திரத்தில் அக்ஷராஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

வெள்ளித்திரையில் அஜித் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிய நிலையில் இந்த திரைப்படம அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.

இந்த படம் பட்ஜெட் 100 கோடியை தாண்டிவிட்டதாகவும் அஜித் படங்களில் இதுவே அதிக பட்ஜெட் படமாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ஐரோப்பாவில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

கடந்த மே மாதம் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது 4 லட்சம் லைக்குகள் பெற்று கடந்த ஆண்டு ரஜினி நடித்து வெளி வந்து 4.64 லட்சம் லைக்குகள் பெற்ற ‘கபாலி’ பட டீசர்க்கு அடுத்த இடத்தில் உள்ளது.

அனிருத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.