ajith vivegam movie updation news

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது, இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டாவது ஸ்டில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

நேற்று நள்ளிரவு சரியாக 12.01க்கு வெளியான இந்த புதிய ஸ்டில்லை வெறும் 14 நிமிடங்களில் அஜித் ரசிகர்கள் போட்டோபிளக்ஸ் ஆக தயார் செய்து அந்த நள்ளிரவிலும் சுவற்றில் ஒட்டி கெத்தை காட்டியுள்ளனர்.

இந்த போட்டோ பிளக்ஸை மதுரை அஜித் ரசிகர்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக விவேகம் வெளியாகும் நாள் திருவிழாபோல் அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என கூறப்படுகிறது.