கோடம்பாக்கத்து மாஸ் ஹீரோக்கள், மெகா ஹீரோயின்கள் எல்லாம் சாதாராண ஃபீலிங்குகளுக்கு அப்பாற்ப்பட்டவர்கள், தர லோக்கலாக எதையும் செய்யாமல் ரொம்ம்ம்ம்ப்ப்ப டீசண்டாக எதையும் அணுகக்கூடியவர்கள் என்று ரசிக குஞ்சுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு என்பதை நிரூபிக்க அடிக்கடி பல சம்பவங்கள் நிகழும். அதில் ஒன்றுதான் இது....

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் பட டிரெய்லரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து ‘வார்த்தையே வரலை!’ என்று சிலிர்த்திருந்தார் நடிகை குஷ்பு. அத்தோடு விடாமல் நடிகை நயன் தாராவை ‘செம்ம அழகு’ என பாராட்டியதோடு அஜித்தையும் ஓவராய் புகழ்ந்து, கொஞ்சிக்குழாவி வார்த்தைகளை போட்டிருந்தவர் அப்படியே அந்தப் படத்தை ஓப்பனிங் ஷோவே நிச்சயம் பார்ப்பேன், அதற்கு தகுதியான படம் அது என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பொங்கியிருந்தார். இதைப் பார்த்து ‘விஸ்வாசம்’ டீம் ஏக மகிழ்ச்சி. ஆனால் தல வழக்கம்போல் அலட்டிக்கலை. 

காரணம்?....குஷ்புவின் வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலை அவர் தெளிவாக புரிந்து வைத்திருப்பதுதான். அதாவது ரஜினிகாந்தை பழிவாங்கவே தன்னை குஷ்பு இப்படி ஓவராய் புகழ்வதாக நினைக்கிறார் அஜித். அதற்கு பின்னணியும் இருக்கிறது. அதாவது ரஜினியின் பேட்ட படத்தில், சில வருடங்களுக்கு முன் செம்ம டிரெண்டிங்கில் இருந்த ஒரு ஹாட் நாயகி ஒருவரை நடிக்க வைக்க தேடினர். இது சிம்ரன், மீனா, குஷ்பு, ஜோதிகா உள்ளிட்ட சில மாஜி நாயகிகளின் காதில் விழுந்தது. இந்த வாய்ப்பை எப்படியாவது கேட்ச் செய்து, மீண்டும் இண்டஸ்ட்ரியில் செம்ம ரவுண்டு வருவதற்காக ரொம்பவே மெனெக்கெட்டார் குஷ்பு. 

இதற்காக ரஜினி வரைக்கும் கூட சிபாரிசுக்கு போனாராம். ஆனால் ‘இதெல்லாம் டைரக்டரோட முடிவு! நான் என்ன சொல்றது?’என்று தலைவன் தலையை திருப்பிக் கொண்டாராம். வாய்ப்போ சிம்ரனுக்குப் போய்விட்டது. ஏற்கனவே சந்திரமுகி படத்திலேயே ஜோதிகாவின் கேரக்டரை சிம்ரதான் பண்ணியிருக்க வேண்டியது. ஆனால் சில பர்ஷனல் காரணங்களால் அதை தவறவிட்டிருந்தவர், ரஜினியுடன் நடிக்கும் இந்த வாய்ப்பை பச்சக் என்று கவ்விக் கொண்டார்.

 

குஷ்புவுக்கு இதில் செம்ம டென்ஷன். ’நான் அன்னைக்கு மாதிரியே இப்பவும் கலர்ஃபுல்லாவும், புஸு புஸு ஸ்ட்ரக்சர் குறையாமலும் வெச்சிருக்கேன். சில பேரை மாதிரி காய்ஞ்சு சுருங்கி, கண்ணுல வளையம் விழுந்தா இருக்கேன்?’ என்று சிம்ரனை ஜாடையாக தன் நண்பர்கள் வட்டாரத்தில் வறுத்தெடுத்தார். விஷயம் சிம்ரனின் காதுகளுக்குப் போக, அவரோ ‘நான் இப்ப கூட விஜய்க்கு ஜோடி போடலாம்! ஆனா அவங்க வந்தா அவருக்கு அம்மா கேரக்டர்தான் பண்ண முடியும்.’ என்று பதிலுக்கு போட்டுப் பொளந்தார். இந்த சண்டை இண்டஸ்ட்ரி தாண்டி வெளியே வரவில்லை.

 

அதேவேளையில் ரஜினி மீது தனக்கிருந்த கடுப்பை எப்படியாவது வெளிப்படையாக கொட்டிவிடும் எண்ணத்தில் வெறியாய் இருந்தார் குஷ்பு. அதற்கு லாவகமாக வந்தமைந்தது ‘விஸ்வாசம்’ பட டிரெய்லர். மனுஷி நயனையும், அஜித்தையும் கொண்டாடிக், கொஞ்சித் தள்ளிவிட்டார். அதிலும் தல!யை அவர் ஓவராய் தூக்கி வைத்துப் பேசியது ரஜினியை கடுப்பேற்றத்தான்! என்று கோடம்பாக்கத்தின் ஜூனியர் மோஸ்ட் லைட்மேன் வரை சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார்கள்.  

பேட்ட படத்தில் தனது லுக்கும், ஆக்‌ஷனும், ஸ்டைலும் கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து வருடம் பின்னால் உள்ள ரஜினியாக மாறிவிட்டதாக ஊரே கொண்டாடுகையில், குஷ்பு தன்னை வெறுப்பேற்றவே அஜித்குமாரை ஓவராய் பாடுகிறார் என்பது ரஜினிக்கும் புரிந்துவிட்டது. வழக்கம்போல் ‘ஹ்ஹா!’ என்று சிரித்துவிட்டு ஒதுங்கிவிட்டார். குஷ்பு இப்படி தங்கள் தல!யை கொண்டாடியதற்கு சமூக ஊடகத்தில் நன்றி மேல் நன்றி சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ...’பார்க்கத்தான போற அந்த காளியோட ஆட்டத்த!’ என்கிறார்கள். சூப்பருல்ல!