ajith visuvasam movie heroin revelead
அஜித் தற்போது நான்காவது முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். திரைப் படத்தின் பெயரை வெளியிட எந்த ஒரு சஸ்பென்சும் வைக்காமல், படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் பெயரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் படக் குழுவினர்.
இந்நிலையில் பலரது கேள்வியாக இருந்தது, இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் யார் என்பது தான். தற்போது இது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும் அனுஷ்கா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப் படுகிறது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவலையும் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அனுஷ்கா, கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
