இந்த வருடம் பொங்கலுக்கு தல அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆகிய இருவருடைய திரைப்படங்களும் வெளியாக உள்ளதால், இருதரப்பு ரசிகர்களும் இப்போதே படத்தை மிக பிரமாண்டமாக வரவேற்க தயாராகிவிட்டனர்.

எனினும் இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படத்தை ஒரே சமயத்தில் வெளியிட்டால் போதிய திரையரங்கம் மற்றும், வசூலிலும் தொய்வு ஏற்படும் என கருதி சிலர் 'விஸ்வாசம்' படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க கோரி பிரஷர் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அதை தொடர்ந்து மறுத்து வந்த  படக்குழு அதிரடி முடிவால் தல படத்திற்கு செக் வைக்க நினைத்தவர்களையே அதிரவைத்துள்ளது.  

மேலும் விசுவாசம் திரைப்படம் பற்றி திடீர் திடீர் என நிலையில்லாத தகவல்கள் வெளியாவதால், அஜித் ரசிகர்கள் பலர் வரும் பொங்கலுக்கு 'விஸ்வாசம்' வருமா? வராதா? என சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். 

இது போன்ற குழப்பங்களுக்கு முற்று புள்ளி வைக்கு விதத்தில், திடீரென்று படக்குழு சென்னை முழுவதும் 'விஸ்வாசம்'  பொங்கல் வெளியீடு என்று பேனர் வைத்துவிட்டனர்.

இதன் மூலம் கண்டிப்பாக 'விஸ்வாசம்' பொங்கலுக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அஜித் ரசிகர்களும் இதனை சற்றும் எதிப்பார்க்காததால் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.