சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விவேகம்' படத்தை தொடர்ந்து தல அஜித் நான்காவது முடையாக 'விசுவாசம்' படத்தில் இணைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் போது, அஜித் வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு வில்லன்களை வெளுக்கும் புகைப்படம் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீரம் படத்தை போலவே அஜித்,  'விஸ்வாசம்' எதார்த்த்தமான கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

படத்தின் காட்சிகள் வெளியாகி விட கூடாது என ஏற்கனவே பாதுகாப்பை படக்குழுவினர் பலப்படுத்தியும், அவர்களை மீறி அஜித் ஒரு இரும்பு கூண்டுக்குள் வில்லன்களை அடிக்கும் காட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கடும் அப்சட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் அதிக ரசிகர்களால் பகிரப்பட்டு, இந்தியளவில் டிரெண்டிங்காகி உள்ளது. இது படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.