அஜித் நடித்த விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அஜித் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் இது தான். ரஜினியுடன் நேரடியாக மோதிய அஜித்தின் முதல் படம் விஸ்வாசம்

இயக்குநர் சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்த படம்  விஸ்வாசம். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.130 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். ஆக்சன் செண்டிமெண்ட் பின்னணியில் உருவான இந்தப்படம் ரஜினி நடித்த பேட்ட படத்தின் வசூலை மிஞ்சியது. இந்நிலையில் அஜித்தின் 48 வது பிறந்த நாளான கடந்த மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது. 


இப்போது தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் விஸ்வாசம் படம் சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் இந்திய அளவிலான டி.ஆர்.பி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விஸ்வாசம் பட ஒளிபரப்பு. இந்தப்படத்தை 18. 1 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளனர். இத்தகவலை சத்யஜோதி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

இதனை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் இன்னும் எதாவது ரெக்கார்ட் இருந்தா சொல்லுங்க அதையும் அடிச்சுதூக்குறோம்.தொடர்ந்து நம்மலே முதல் இடத்துல இருந்த கொஞ்சம் போர் அடிக்கும்ல யாராச்சி பக்கத்துல வரும் போது தான் இன்னும் ஆட்டம் சூடு புடிக்கும் பக்கத்துல வரவன அடிச்சி ஓட விட்டு எப்போமே நாங்க தாண்டா சொல்லும் போது ஒரு பீல் வரும் பாருங்க நீ வாதலைவா’’ என்கிற ரீதியில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.