தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில், அவர் இளமையான தோற்றத்தில், நடிகை வித்யா பாலனுடன் கழுத்தில் மலையோடு, புது தம்பதியாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில், அவர் இளமையான தோற்றத்தில், நடிகை வித்யா பாலனுடன் கழுத்தில் மலையோடு, புது தம்பதியாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிங்க் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான டப்பிங் பணியையும் அஜித் துவங்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள வித்யாபாலனும் - அஜித்தும் கழுத்தில் மாலையோடு புது தம்பதிகளாக எடுத்துக்கொண்ட சுவரில் மாட்டபட்டது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகிறார்கள். 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். 

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.