அஜீத் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கியிருந்த திரைப்படம் 'வீரம்'. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.  அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.  தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.  

இந்த படத்தின் ரீமேக்கில் நடிகர் அக்ஷய்குமார், அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.  தற்போது இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்ஷய் குமார்  'சூர்யவம்ஷி',  'லக்ஷ்மி பாம்' ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால், கால் சீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அவருக்கு பதிலாக, பிரபல நடிகர் விக்கி கௌஷல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகி முடிவு செய்யப்படாத நிலையில், இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.