நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட்டத்தை தொடர்ந்து  அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு சரி, அதன் பின்னர் போனி கபூர் வாயைத் திறக்கவே இல்லை. 

கொரோனாவால் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வருகிறது.  இதில் செம்ம எங் அண்ட் ஃபிட் லுக்கில் தல அஜித் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அப்போது நடந்த ஸ்டேண்ட் காட்சிகளால் அஜித் கையில் மீண்டும் காயம் ஏற்பட ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டது. 

தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு வலிமை குழு தயாராகி விட்டது. இதையும் ஐதராபாத்திலேயே நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் அங்கு செல்கின்றனர். இந்த ஷெட்யூலை ஜனவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்த 3 மாதத்திற்குள் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை எல்லாம் முடித்து கோடை விடுமுறையாக படத்தை வெளியிட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர்.