தீபாவளியை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த அப்டேட் வெளியான போதிலும் அஜித்தின் வலிமை படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக  ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. கிட்ட தட்ட 7  மாதங்களுக்கு பின், மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுத்ததால் உரிய பாதுகாப்புகளுடன் மீண்டும் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அஜித் தீபாவளிக்கு கூட ஓய்வில்லாமல் ஷூட்டிங்கில் முழு கவனம் செலுத்தி நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ படத்தின் அப்டேட் வராமல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து இருப்பது குறித்து போனிகபூருக்கும் தெரியும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதில் படக்குழுவினர்கள் உறுதியாக இருப்பதாகவும், ‘வலிமை’ படத்தின் அப்டேட் வரும்போது மாஸாக இருக்கும் என்பதால் தற்போது கோபமாக இருக்கும் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக உற்சாகமாக மாறுவார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அஜித் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில், அணைத்து காட்சிகளும் எடுத்து முடிக்க பட்டுவிட்டதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து விரல் அறுக்கப்படும் என்றும், அத்துடன் அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.