The Batman Movie : ஆங்கிலத்தில் உருவாகி உள்ள பேட்மேன் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்த படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்மேன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் ரஷ்யாவில் மட்டும் வெளியிடப்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அங்கு மட்டும் படத்தை வெளியிடவில்லை என இதன் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. அதன்படி ஆங்கிலத்தில் உருவாகி உள்ள இப்படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருவதால், வசூலிலும் பல்வேறு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்மேன் படத்தின் வருகையால் அஜித்தின் வலிமை படத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், அதை பீட் செய்யும் வகையில் பேட்மேன் படம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... AK 61 movie Update : அஜித்தை விடாது துரத்தும் V சென்டிமென்ட்.... AK 61 படத்துக்கும் இதுதான் டைட்டிலாமே?
