AK 61 movie Update : அஜித்தை விடாது துரத்தும் V சென்டிமென்ட்.... AK 61 படத்துக்கும் இதுதான் டைட்டிலாமே?
AK 61 movie Update : அஜித் நடிப்பில் தற்போது உருவாக உள்ள ஏ.கே.61 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். சமீப காலமாக இவர் நடிக்கும் படங்களுக்கு V என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டு வருகின்றன. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை என தொடர்ந்து தனது படங்களில் V சென்டிமென்ட்டை பாலோ செய்து வருகிறார் அஜித்.
இந்நிலையில், இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள AK 61 படத்துக்கும் V சென்டிமென்ட்டில் தான் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு வல்லமை என பெயரிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
AK 61 படத்தை எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாக உள்ள ஏ.கே.61 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாம். இப்படத்திற்காக நடிகர் அஜித் தீவிர உடற்பயிற்சி செய்து 25 கிலோ வரை உடல் எடையை குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
AK 61 படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். அதில் ஒன்று வில்லன் வேடம் என கூறப்படுகிறது. வில்லன் வேடத்திற்காக நீண்ட தாடியை வளர்த்துள்ளார் அஜித். அவர் புது கெட் அப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Gangai Amaran : இப்படியா பண்றது... எரிச்சலாகுது - பட விழாவில் நடிகர் விஜய்யை திட்டி பகீர் கிளப்பிய கங்கை அமரன்